தம்மிடம் இருப்பதில் அழகான ஆடையை ஜுமுஆவுக்காக அணிந்து கொள்ளவேண்டும் !

886. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்,
பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே’ என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள்.

 

 “மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது” என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். 
பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர்(ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர்(ரலி) ‘பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை’ என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர்(ரலி) வழங்கினார்கள்.  

புகாரி  : 11