அம்பறை மாவட்ட அரசியல் அதிகாரம் மு.கா வசம் – பிரதி அமைச்சர் ஹரீஸ் பெருமிதம் !

ஹாசிப் யாஸீன்

 

 அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர்நியமிக்கபட்டுள்ளமை அம்பாறை மாவட்ட மக்களுக்கும் கட்சிக்கும் கிடைத்த ஒரு கௌரவமாகும் எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

haren mansoor hakeem

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின்பேரில் இந்நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் வழங்கப்பட்டதையிட்டுமகிழ்ச்சியடைவதோடு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூருக்கு வாழ்த்துக்களையும்தெரிவித்துக்கொள்கின்றேன்.

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களுக்கு பின்னர் அம்பறை மாவட்டத்தின் அபிவிருத்திகுழுத் தலைவராக சிறுபான்மையைச் சேர்ந்த அதுவும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை எமது கட்சிக்கும், மக்களுக்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும். 

அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் இன்று முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் கிடைக்கப்பெற்றமைகட்சியின் போராளிகளினதும்,  ஆதரவாளர்களினதும் மனங்களில் ஒரு நம்பிக்கையைஏற்படுத்தியிருக்கின்றது. 

எதிர்வரும் காலங்களில் எமது மாவட்ட அபிவிருத்திகள் தங்குதடையின்றி நடைபெறும் என்பதில் ஐயமில்லைஎன்பதோடு அபிவிருத்தி குழுத்தலைவர் தனது பணிகளை வெற்றிகரமாக தொடர வாழ்த்துகின்றேன் எனவும்குறிப்பிட்டுள்ளார்.