மருதமுனை ஜீ 65 வீடுகள் மாற்றுத் திட்டம் பற்றி அமைச்சர் றிசாத்திடம் NDPHR கோரிக்கை!

 

கடந்த எட்டு வருடம்களாக சுனாமியால் வீடுகளை  இழந்தவர்களுக்காக மருதமுனை ஜீ 65வீடுகள் கட்டப் பட்டு பாழ் அடைந்து அழிந்து கிடக்கும் வீடுகள் தற்போது பாவனைக்கு உதவாது கிடப்பில் கிடக்கின்றது என்பதை நாம் அறிவோம் .

 

இவ் வீடுகள் ஏன் இன்னும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப் பட வில்லை என்ற  காரணம்  இன்னும் மர்மமாகவே உள்ளது .  இப் பிரச்சினை கடந்த பல தேர்தல்களில் முன் வைக்கப் பட்டும்  தீர்க்க முடியாப் பிரச்சினையாகவே நீண்டு கொண்டிருக்கிறது . ஆகையால் மருதமுனை ஜீ 65வீடுகளை விட்டுத் தள்ளுங்கள் , வேறு பிரச்சினைகள் இல்லாத ஒரு இடத்தைத் தெரிவு செய்து மத்திய கிழக்கு நாட்டுச் செல்வந்தர்களின் அல்லது என்.ஜி ஓ களின்  உதவியுடன் பல வீடுகளை அமைத்துக் கொடுப்பதன் மூலமே சுனாமியால் வீடுகளை  இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்க முடியும்.

 

இவ்வாறன உதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினால் மிகச் சுலபமான முறையில் அவரது செல்வாக்கின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என  திடமாக நாம்  நம்ப முடியும்.  

 risad b

இதற்கான கோரிக்கை ஒன்றினை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள்  அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முன் வைக்க வுள்ளார் .

 

இவ்வாறன செயல் பாடுகளைப் பெற்றுக் கொள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை எதிர் வரும் பிரதேச சபை தேர்தலில் பலப் படுத்துவின் மூலம் மேலும் மேலும் பல வகையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கூறினார்கள்