138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நாளை பகல் – இரவு ஆட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
அடிலெய்டில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் முதல் முறையாக இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நாளை (27) முதல் டிசம்பர் 1 ஆம் திகதி வரை அடிலெய்டில் நடைபெறவுள்ள 3 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது.