ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது சிரியா : அமெரிக்கா குற்றச்சாட்டு !

SYRIA-CONFLCIT-OIL

 ஐ.எஸ் தீவிரவாதிகளுடைய இஸ்லாமிய தேசத்திடம் இருந்து சிரிய அரசாங்கம் எண்ணெய் வாங்குவதாக அமெரிக்க அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த எண்ணெய் வர்த்தகத்திற்காக சிரிய தொழிலதிபர் ஒருவருக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.

உலகின் மிகப்பெரிய பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்துள்ள ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) அதன் கொடூரத் தாக்குதல்களால் சர்வதேச நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. “அல்காய்தா, தலிபான்கள், லஸ்கர்-இ-தொய்பா போன்ற இயக்கங்களைவிட பணபலத்திலும் படைபலத்திலும் மிக வலுவான இது, இதுவரை பார்க்காத அதிக பண மதிப்பைக் கொண்டுள்ள இயக்கமாக உள்ளது. 

ஈராக்கிலும், சிரியாவிலும் பல்வேறு எண்ணெய் வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ்., எண்ணெய் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முதல் 2 மில்லியன் டாலர்வரை சம்பாதிக்கிறது. 

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுடைய இஸ்லாமிய தேசத்திடம் இருந்து சிரிய அரசாங்கம் எண்ணெய் வாங்குவதாக அமெரிக்க அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த எண்ணெய் வர்த்தகத்திற்காக சிரிய தொழிலதிபர் ஒருவருக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறுகிறது.

இது குறித்து அமெரிக்க அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக கசப்புணர்வு மற்றும் வன்முறை பரவுவதற்கு சிரிய அரசே காரணம். எண்ணெய் வாங்குவதன் மூலம் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு பொருளாதார ரீதியாக ஊக்குவித்து வருகிறது .” என்று அமெரிக்க கருவூலம் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.