இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது இந்தியாவின் பூர்வீக மக்களான மாதேசிகளின் தொடர் போராட்டத்தால் நேபாளத்துடனும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்த கருத்தரங்கு தலைநகர் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவிற்கான பாகிஸ்தானின் உயர் ஆணையர் அப்துல் பாஷிட், இந்தியாவிற்கான நேபாள தூதர் தீப் குமார் உபத்யாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அப்துல் பாஷிட், ”அமைதியை நிலைநாட்ட நாம் ஒருவரோடு ஒருவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தடைகளை அகற்ற பேச்சுவார்த்தை என்பது முக்கியமானது.” என்று வலியுத்தினார்.
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கவும் இருநாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் நட்பு நிலவவும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் பாகிஸ்தான் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவிற்கான நேபாள தூதர் தீப் குமார் உபத்யாய் பேசுகையில், “ஒரு நாட்டில் நடக்கும் சம்பவம் இது. ஆனால் இருநாடுகளின் அரசாங்கங்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.” என்றார்.