இன ரீதியாக தமிழ், முஸ்லீம், பௌத்த, கிரிஸ்த்துவ பெயரிலான பாடசாலைகள் குறித்து நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் : ஜனாதிபதி

zahira1.jpg2_1
அஸ்ரப் ஏ சமத்

இன ரீதியாக தமிழ், முஸ்லீம், பௌத்த, கிரிஸ்த்துவ  பெயரிலான பாடாலைகள் குறித்து நாம் மீள் பரிசீலனை  செய்ய வேண்டும்.  

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா கொழும்பு சாஹிராக் கல்லுாாி பரிசளிப்பு விழாவில் 
கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் கொழும்பு சாஹிரா பழைய மாணவா்களான  அமைச்சா் றிசாத்பதியுத்தீன், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சா் அமீா்அலி, பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான், பலஸ்தீன் துாதுவா் பௌசுல் அன்வா், ஆளுணா் சபைத் தலைவா் பௌசுல் ஹமீத், கல்லுாாி அதிபா்  சட்டத்தரனி றிஸ்வி மரிக்காரும் கலந்து கொண்டனா்.
ஜனாதிபதி இங்கு தொடா்ந்து உரையாற்றுகையில்
 
இக்கல்லுாாியில் சகல சமுகத்தினையும் சோ்ந்த மாணவ ஆசிரிய சமுகம் இன ஜக்கியத்துக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றது. 3 மொழிகளையும் கொண்டதொரு இப் பாடசாலை இந்த நாட்டில் உள்ள ஒரு முன்மாதிதியான் நுாற்றாண்டு பழமைவாய்ந்ததொரு பாடசாலையாகும். 
கல்விக்கொள்கையில் காணப்பட்ட முரண்பாடுகளே கிராமப் பாடசாலைகளில் இருந்து நகர பாடசாலைகளை நோக்கி மாணவா்கள் வருவதற்கு  காரணமாகும்.  நகர பாடசாலைகளில் உள்ள வசதிகள் கிராமப் பாடசாலைகளில் காணப்படுவதில்லை.  இந்த விடயம் தொடா்பில் அரசு ஒரு நிலையான கொள்கைரீதியில் உடன்பாட்டுக்கு வந்துள்ளது.  
பாடசாலை என்பது வெறுமனமே பாடப்புத்தகங்களுக்குள் மட்டும் புத்தகப் பூச்சியாக இராது அவா்கள் சகல விடயதாணங்களிலும் முழுமையாக கற்ற கல்விச் சமுகமாக எதில்காலத்தில் திகழ்ந்து பரந்துபட்டு இந்த நாட்டுக்கும் தமது சமுகத்துக்கும் சிறந்த கல்வியலாளா்களாக  மாறல் வேண்டும்.
கொழும்பு சாஹிராக் கல்லுாாி இந்த தேசத்திற்கும் சிறந்த கல்விமாண்களை உருவாக்கும் என நம்புகின்றேன். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இங்கு உரையாற்றினாா். இவ் ஆண்டின் சகல துறைகளிலும்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஜனாதிபதி விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. 
 
 za4_Fotor_Collage_Fotor