எதிபார்ப்புகளை குப்பையில் தள்ளிய வரவு செலவுத் திட்டம் : எஸ்.எம். சபீஸ் !

எதிபார்புகளை குப்பையில் தள்ளிய வரவு செலவுத் திட்டம் சாதாரண மக்கள் மோட்டார் வண்டி கூட ஓடமுடியாது அநீதியையும் விலைவாசி உயர்வினையும் முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஏழை மக்களின் எதிபார்புகளை பின்தள்ளியுள்ளது என தே கா உயர்பீட உறுப்பினரும் முன்னால் அமைச்சர் அதாஉல்லாவின் பொதுசனத் தொடர்பு அத்காரியாக கடமை புரிந்தவருமான எஸ் எம் சபீஸ் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.

safees

 அன்றாடம் பாவனையில் உள்ள மோட்டார் சைக்கிளின் மீதான வரி முச்சக்கர வாகனத்தின் மீதான வரி நேரடியாக ஏழைகளை குறிவைத்து தாக்குவதற்கு சமனான ஒன்றாகும் இது இன்று பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைவிடப்பட்டுள்ளது நாட்டின் அபிவிருத்தியை அடியோடு நிறுத்தி விட்ட அரசாங்கம் பல்லாயிரக் கணக்கான தொழில் வாய்ப்புக்களை நிறுத்தியுள்ளது இதன் மூலம் இளைஜர்களை நிர்கதியாக்கியுள்ளது சாதாரண வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களே நாட்டில் அதிகம் பேர் காணப்படுகின்றனர் .

 

 அவர்களில் பலபேர் கடன் சுமையோடுதான் வெளிநாடு செல்ல எத்தனிக்கின்றனர் இப்படி இருக்கும் போது அரசாங்கம் ஓர்நாளில் கடவுச் சீட்டினை பெற்றுக்கொல்வதர்க்கான தொகையினை அதிகரிப்பது எந்த வகையில் நியாயமாகும் புத்தி ஜீவிகள் கல்விமான்கள் வசதி படைத்தோர் நாட்டுக்குள் வர வேண்டும் எனக் கூறிய அரசு இரட்டைப் பிரஜா முறை வீசா வழங்குவதற்கான கட்டணத்தை 3இலட்சமாக அறிவித்துள்ளமை அரசாங்கத்தின் பேச்சுக்கள் வெறும் நாடகமே எனத் தோன்றுகிறது அங்கர் போன்ற மக்கள் அதிகம் நுகரும் பால்மா பொருட்களுக்கு விலை குறிப்பினை செய்யாமல் உள்நாட்டுப்பால்மா விலைக்குறைப்பு என மயக்க மொழியில் மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.

 

 அமெரிக்கர்கள் 5 வீட்டுக்கு ஓர் கார் வைத்துள்ளனர், நமது நாட்டு மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் கார் பாவிக்கக் கூடிய விதத்தில் செலவு குறைந்த வாகனங்களை தரமானதாக உருவாக்குங்கள் என்று கட்டளை இட்டு வெற்றியும் கண்டவர் ஹிட்லர் ஆனால் நமது அரசாங்கம் சாதாரண மக்களுக்கு எதற்கு கார் போன்ற வாகனங்கள் என்பது போல வரியை உயர்த்தி உள்ளது இதனையும் சிலர் ஆதரிப்பர், எவ்வாரென்றால் எதற்காக ஆடம்பரம் என்பர், சாதாரண மக்கள் வாகனமே ஒடக்கூடாதா? கேஸ் விலை மாத்திரமே 150 ரூபாவால் குறைவடைந்துள்ளது இதுவும் கண்துடைப்பே விரைவில் யாருக்கும் தெரியாமல் அதிகரித்து விடுவர் இருந்தாலும் முஸ்லிம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் இப்போது இல்லாமல் இருப்பதன் காரணத்தினாலேயே நாமும் மக்களும் இவ் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.