மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப்போக்க 65 இலட்சம் பணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

அபு அலா 

அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை (20) வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி குழுவினர்கள் பங்கேற்று பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில், தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வகுப்பறைகள் போதாதுள்ளதால் மற்றுமோர் வகுப்பில்வைத்து மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

al1_Fotor

இதனை போக்கும் நோக்கில், பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியை கொள்வனவு செய்து தருமாறும், குறித்த காணி உரிமையாளரிடம் பாடசாலை நிலைமைகளைப் பற்றி எடுத்துரைத்துள்ளோம். அதை காணி உரிமையாளர் ஏற்றுக்கொண்டு பாடசாலைக்கு அவரின் காணியை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதற்காக சுமார் 65 இலட்சம் பணம் தேவைப்படுவதாகவும் பாடசாலை அதிபர் மற்றும் அபிவிருத்தி குழுவினர்கள் ஆகியோர்கள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் கவனத்திற்கு முன்வைத்து அதுதொடர்பான மகஜரையும் வழங்கி வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நான் கல்வி கற்ற பாடசாலையாகும், எனது பாடசாலைக்கு என்னாலான சகல உதவிகளையும் இங்கு தேவைப்படுகின்ற அனைத்துக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய நான் தயாராக இருக்கின்றேன். அந்தவகையில், எமது பாடசாலைக்கு தற்போது நிலத்தேவைப்பாடு இருப்பதை என் கவனத்திற்கு முன்வைத்துள்ளீர்கள் இதனை பெற்றுத்தருவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வேன்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருடனும் கலந்தரையாடி அதற்கான சகல நடவடிக்கைளையும் முன்னெடுப்பேன் என்றார்.