ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று இரவு மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.
இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு புறப்படுகிறேன். அங்கு இரண்டு முக்கிய கூட்டங்களில் கலந்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு கூடுதலான முதலீட்டை ஈர்க்கும் விதமாக இந்த பயணத்தை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும், கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து நவம்பர் 23-ம் தேதி சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லீ செய்ன் லூங்ஙை, சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார். பின்னர் நவம்பர் 24 ஆம் தேதி இரவு புதுடெல்லி திரும்புகிறார்.