இஸ்லாமும் தீவிரவாதமும் ஓர் சிறப்புப் பார்வை !

223816_40202161136515045_1341949389_n_Fotor
இஸ்லாம் முழு மனித  சமூதாயத்தினதும் ஈருலக வெற்றிக்காக  இறைவனால் அனுப்பப் பட்ட உண்மையான மார்க்கமாகும்

கிறிஸ்தவ மதம் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் பௌத்த மதம்
மகான் புத்தரின் பெயராலும்  மார்க்ஸியம் கால்மார்க்ஸின் பெயராலூம்  அழைக்கப்படுகின்றன அதே போன்று ஹிந்து மதம் ஹி்ந்து சமூகத்தினது பெயராலும் யூத மதம் யூத சமூகத்தின் பெயராலும் நிலைக்கப் பெற்றுள்ளன

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தனிப்பட்ட ஒருவரது பெயருடனயோ ஒரு சமூகத்துடனோ தொடர்புடையதல்ல அது முழு மனித  சமூதயத்திற்கும் கிடைத்த இறைவனின் பேரருளாகும்

இஸ்லாம் என்ற பெயரே அதற்குச் சான்று

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு கட்டுப்படல் கீழ்ப் படிந்து நடத்தல் வணங்கி நடத்தல் என்பது பொருள் சாந்தி சமாதானம் எனவும் பொருளுன்டு அதாவது எவர் இறைவனுக்கு கீழ்ப்படிந்து அவன் கட்டளைகளை செவியேற்று வழி நடக்கின்றாரோ அவர் மத்தியில் சாந்தியும்  சமாதானமும் வந்து சேர வேண்டும்

இஸ்லாத்தில் பல தெய்வ வணக்கம் சிலைகள் உயிரட்ட படங்கள் மரங்கள் நெருப்பு சூரியன் சந்திரன் மனிதர்கள் போன்ற வற்றின்  மீதான வணக்கம் இல்லை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் இஸ்லாம் மனிதனின் இயற்கையான தனது அன்றாட தேவைகளை செய்வதற்கு மறுக்க வில்லை ஆண்கள் பெண்கள் என்ற பாகு பாடின்றி சம அந்தஸ்த்து கொடுக்கிறது மொழி சாதி இன நிற வர்க்க தேச ரீதியாக மனிதர்களை வேறு படுத்தி காட்டுவதை முற்றாக நிராகரிக்கின்றது

ஒன்றே குலம் – அது முழு மனித சமூதாயம்
ஒருவனே தேவன்- அவன் அல்லாஹ் ஒருவனே

என்ற கொள்கையை எள்ளளவும் பிழையின்றி பின்பற்றும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என ஆராய்ந்து பார்த்தால் புரியும்
அதற்கு பின் வரும் அல் குர் ஆன் வசம் பரை சாற்றுகின்றது

إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ

“திண்ணமாக இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட மார்க்கமாகும்”

( அல் குர் ஆன் 3:19 )

இஸ்லாம் தீவிர வாதத்தை விரும்புகின்றதா……

இன்று உலகளாவிய ரீதியில்  இஸ்லாம் மார்க்கம்  பற்றிய தப்பெண்ணம்  மாற்று மத சகோதர சகோதரிகளிடத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது இதற்கு முக்கிய காரணம் உலகத்திலிலுள்ள சக்கி வாய்ந்த அந்திய கைக் கூலியான  ஊடகங்கள் எல்லாம் இஸ்லாத்தின் மெச்சத்தக்க வளர்ச்சியை பார்த்து அஞ்சி இஸ்லாம் இந்ந உலகத்தை ஆட்சி செய்துவிடுமோ என்று இஸ்லாத்தின்  மகத்துவமும் தாத்பரியமும் அறியாமல் இஸ்லாம் மார்க்கத்துக்கு இழுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்

இன்னும் சில மாற்று மத தலைவர்களும்  மத குரு மார்களும் இஸ்லாம் தீவிரவாதத்துக்குறிய மார்க்கம் என்று கூறி வருகின்றனர் இதற்கு இவர்கள் இஸ்லாத்தின் இறை வேதமான அல் குர் ஆனிலிருந்து சில ஆயத்துக்களை மேற் கோள் காட்டுகிறார்கள்

وَقَاتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ ۖ فَإِنِ انتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ 
பித்னா குழப்பமும் கலகமும் நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள் ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால்  அக்கிரமக்காரர்கள் தவிரவேறு எவருடனும் பகை.கொண்டு போர் செய்தல் கூடாது
(அல்குர்ஆன் : 2:193)

وَقَاتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ ۚ فَإِنِ انتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ 

முஃமின்களே! இவர்களுடைய விஷமங்கள் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வின் மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள் ஆனால் அவர்கள் விஷமங்கள் செய்வதிலிருந்து விலகிக் கொண்டால்  நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 8:39)

இவர்கள் இதில் எதை குறிப்பிட்டு கூறுகின்றார்கள் என்றால் இஸ்லாம் மார்க்கம் இஸ்லாம்  அல்லாத மாற்று மதத்தவர்களை போரிட்டு கொல்லும் படியும் தனது மார்க்கத்தை  வற்புறுத்தி ஏற்றுக் கொள்ள வைப்பதாகவும் அதற்கு அல் குர் ஆனில் சான்று உள்ள தாகவும் குறிப்பிட்டு சொல்கிறார்கள் 
உண்மையில்  இதற்கு அல் குர் ஆனில் சான்று  உண்டுதான் அதை நாங்கள் மறுக்க வில்லை ஆனால் அங்கு தீன் என்ற வார்த்தையை அவர்கள்  தவறாக புரிந்து கொண்டார்கள்  மார்க்கத்தை நிலை நாட்டும் வரை போரிடுங்கள் என்ற வார்த்தையானது இந்த வசனத்தில் வந்திருப்பதை அந்திய மதத்தவர்கள் மார்க்கத்தை இந்த உலகத்தில் நிலைநாட்டும் வரைபோரிடுங்கள் என்று தப்பாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்

ஆனால் தீன் என்ற வார்த்தைக்கு தமிழில் பல அர்த்தங்கள் உண்டு தீன் என்றால் மார்க்கம் என்று கூறலாம் ஆனால் வழமைக்கு மாற்றமாக நாம் அறியாமல் இருப்பதுதான் தீன் என்ற வார்த்தை தமிழ் மொழியாக்கத்தை உற்று நோக்குவோமானால் அதற்கு கூலி தீர்ப்பு,பரிசு,அதிகாரம் என்று பல் வேறு வகையான அர்த்தங்களை காணலாம் உண்மையில் இந்த அல் குர் ஆன் வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்பது மார்க்கத்தை நிலை நாட்டும் வரை அல்ல அதிகாரம் தன் வசம் வரும் வரையே போரிடுங்கள்  என்ற அர்த்தத்தையே சாரும் என்பதே மறைமுகமான உண்மையுமாகும் 

ஏன் அதிகாரம் தன் வசம் கிடைக்கும் வரை அல்லாஹ் போரிடச் சொல்கிறான் என்றால் இந்த அல் குர் ஆன் வசனம் இறக்கப்பட்டது போருடைய காலமாக கூட இருக்கலாம் ஆகவேதான் போரிட்டால் ஓடி ஒழிந்து கொல்லாமல் அதிகாரம் கை வசம்  கிடைக்கும் வரை கடைசி போரிடச் சொல்கிறான் இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களை பொருமையுடன் வாழச் சொல்கின்றதே தவிர மாறாக கோழையாக ஒரு போதும்  வாழச் சொல்ல வில்லை

உண்மையில் இவர்கள் சொல்வதைப் போன்று இஸ்லாம் தனது மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளதவர்களை கொல்லும் படி கூறியிருந்தால் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் சுமார் எட்டு வருட காலம் இஸ்லாமிய ஆட்சி நிறுவினார்கள் அவருடைய ஆட்சியின் கீழ் யூதர்கள் நெருப்பு வணங்கிகள் என்று பல் வேறு மதத்தவர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள் இஸ்லாமிய மார்க்கம் இவ்வாறு மாற்று மதத்தவர்களை கொல்லும் படி கூறியிருந்தால் அன்று அந்திய மதத்தவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களுடைய ஆட்சியில் வாழ்ந்திருக்க முடியாது

அது மட்டு மன்றி இன்றயை சூழ் நிலையில் இஸ்லாமிய ஆட்சி நிறுவியிருக்கின்ற சவூதி அரேபியா,பஹ்ரேன்,துருக்கி,துபாய், போன்ற பல் வேறு நாடுகளிலெல்லாம் எந்த வொரு பிற மதத்தவர்களும் தற்போது  வாழ்ந்து கொண்டிருக்க  முடியாது  என்பதையும் மாற்று மத சகோதர சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்

மாறாக இஸ்லாம் தனது மார்க்கத்தை நிர்ப்பந்தித்து ஏற்றுக் கொள்ளச் சொல்ல வில்லை விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்ளலாம் விரும்பாதவர்கள் இம் மார்க்கத்தை விட்டும் விடலாம்  இறைவனால் அனுப்பப்பட்ட நபி மார்களுக்கு கூட இம்  மார்க்கத்தை எடுத்துக் கூறவே முடியுமே தவிர மாறாக வற்புறுத்தி ஏற்றுக் கொள்ள வைக்க முடியாது

இதற்கு  அல்லாஹ்வின் திருமறை குர் ஆனில் தக்க  சான்றுகளும்  உள்ளன

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ 
நபியே நீர் சொல்வீராக காஃபிர்களே!
(அல்குர்ஆன் : 109:1)

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ 
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
(அல்குர்ஆன் : 109:2)

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ 
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்
(அல்குர்ஆன் : 109:3)

وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ 
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
(அல்குர்ஆன் : 109:4)

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ 
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
(அல்குர்ஆன் : 109:5)

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ 
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்
(அல்குர்ஆன் : 109:6)

இவ் அத்தியாயங்களிலிருந்து  இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாத்ததையோ தனது மார்க்கத்தை நிர்ப்பந்தித்தோ ஏற்க சொல்ல வில்லை என்பதை எல்லளவும் குறையின்றி எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் 

கிட்லர் எனும் ஓர் கிறிஸ்தவன் கோடான கோடி யூதர்களை கொன்று குவித்த போது கிறிஸ்தவ மதம்  தீவிர வாத மதம் என யாரும் கூறவில்லை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின்  நெதன்யாகு பாலஸ்தீன மக்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் போது யூத மதம் தீவிர வாத மதம் என்றோ பயங்கரவாத மதமென்றோ எந்தவொரு ஊடகமோ எந்த வொருஆட்சியாளானோ குறிப்பிட்டு கூற வில்லை  மோடியின் முதலமைச்சர் ஆட்சியில் இந்தியாவின் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றபோது ஹிந்து மதம் தீவிர வாத மதம் என்று யாரும் கூற வில்லை  ஆனால் இஸ்லாத்தின் சில சுன்னத்துக்களையும் இஸ்லாமிய  பெயர்களையும் வைத்துக் கொண்டு அந்திய மதத்தவர்களை எந்தவீத ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதனால் இவர்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் ஆகிவிட முடியுமா….?  அல்லது வெறு மனே பெயர் தாங்கிய முஸ்லிம்களாக இருக்கின்ற இவர்களின் செயற் பாட்டால் இஸ்லாமிய மார்க்கத்தை நீங்கள் தீவிர வாத மார்க்கம் என்றுதான் சொல்ல முடியுமா இது என்ன நியாயம் சகோதரர்களே..

இஸ்லாமிய மார்க்கம் ஈருலுலகினதும்
வெற்றிக்கான உண்மையான மார்க்கமாகும் அதை விரும்பியவர்கள் பின்பற்றலாம் விரும்பாதவர்கள் விட்டும் விடலாம் எந்தவொரு இஸ்லாமிய ஆட்சியில்லாத நாட்டிலும் முஸ்லிம்கள் போர் தொடுத்து ஆட்சியை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சி முறையை நிறுவச் சொல்லி இஸ்லாம் ஒரு போதும் சொல்ல வில்லை ஆனால் தமக்கெதிராகவோ தமது உயிருலும் மேலான மார்க்கத்துக் கெதிராகவோ பிற மதத்தவர்கள் செயற்படுவார்களேயானால் மாத்திரமே ஜிஹாத்தை  இஸ்லாம் வரையரையுடன் புரிவதற்கு  கற்றுத் தந்திருக்கின்றது என்பதை அறிந்து பிற மதத்தவர்களுக்கும் எடுத்துக் கூறுவோம் இன்ஷா அல்லாஹ்

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை