கைத்தொழில் நாடாக எமது நாடு மிளிர, வரவு செலவுத்திட்டம் அடித்தளமாக அமையும் : ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன்

 

கைத்தொழில் நாடாக எமது நாடு எதிர்காலத்தில் மிளிர சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம்அடித்தளமாக அமையும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்காவினால் நேற்று (20) வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வரவு செலவுத்திட்டம் பற்றிநேத்ரா தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம் பெற்ற வெளிச்சம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

harees

தெற்காசியாவில் பணப்பரிமாற்றலில் முக்கிய பங்கு வகிக்கும் ஹாங் ஹோங் நாட்டிலுள்ள பணப்மறிமாற்றல்நிலையத்தினை ஒத்ததான பணப்பரிமாற்றல் நிலையம் ஒன்றினை கொழும்பில் அமைப்பதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப் பட்டுள்ளது. இதனால் எமது உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள், சிறியமற்றும் நடுத்தர வர்த்தகர்களும் பல நன்மைகளை அடையவுள்ளனர்.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மீனவர் நலன்கருதி மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் மீன்பிடித்துறையில்வளர்ச்சியை கொண்டுவரும். இவ்வாறு மீனவ சமூகத்தினருக்கு பல வரப்பிரசாரங்கள் இதில்குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கங்களில் காணிக்கென ஒரு சீரான காணிக் கொள்கையில்லாமல் இருந்தது. இதனை இந்தநல்லாட்சி அராங்கம் மாற்றியமைத்து அரச காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான கட்டமைப்பாக காணிவங்கியினை உருவாக்கி அதனூடாக காணிகளை வழங்கி உற்பத்தி மற்றும் விவசாயத்துறையில்மறுமலர்ச்சியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமிய மக்களின் வாழ்வாதார மேன்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்றவற்றிக்கான நிதிகள்இவ்வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியவசியப் பொருட்களுக்கான விலைகளும்குறைக்கப்பட்டுள்ளதானது கிராமமட்ட மக்களின் வாழ்வாதாரம், வாழ்வியல் என்பவற்றில் பல மாற்றங்களைஏற்படுத்தும்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடி கணணி கொள்வனவுக்கு வங்கிக் கடன், சகல பல்கலைக்கழகங்களிலும் இலவச வைபை இணைப்பு, வறிய மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகளைநிர்மாணித்தல், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வரிச்சலுகை, தனியார் துறையினருக்கான சம்பள உயர்வு போன்ற வரப்பிரசாரங்களை உள்ளடக்கிய மக்கள் நல மற்றும்எமது நாட்டினை எதிர்காலத்தில் கைத்தொழில் நாடாக மிளிர வைக்கும் வரவு செலவுத்திட்டமாகவும்இதனை பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.