பாராளுமன்றத்தில் தூங்கும் சாணக்கிய தலைமைக்கு சேவை செய்ய கோரிய விண்ணப்பம் !

சுற்றுலா காலங்களில் சுற்றுப்பிரயாணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளைப் போல் எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மற்றும் பிரதிநிதிகள், ஏனைய உறுப்பினர்களும்  எம்மக்களின் வாக்கினை சூறையாட வருகின்றனரே தவிர எமது நாவிதன்வெளி பிரதேச மக்களின் தேவைகளை, குறைபாடுகளை நிபர்த்தி செய்ய முன்வந்ததாக சான்றுகள் இல்லை. தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பின்னர் எந்த அரசியல் பிரதிநிதிகளும் முன்வந்ததாக அறிய முடிய வில்லை.
 இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டை இதனை அசைக்க முடியாது, என்றல்லாம் மார்பு தட்டும் கோட்டையின் சொந்தக்காரர்களான தற்போதைய பிரதி அமைச்சர் சகோதரர் HMM . ஹரீஸ், சகோதரர் பைசால் காசீம், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கோட்டையின் தலைவர் என மார்புதட்டும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் உட்பட அனைவரும் தேர்தல் காலங்களில் மட்டும் உல்லாசப்பிரயாணம் மேற்கொள்ளும் ஒரு பிரதேசமாகவே நாவிதன்வெளி பிரதேசத்தினை கணிப்ப்பிட்டுள்ளனர்.
12270470_1676917689256574_154721078_n_Fotor_Collage_Fotor
அமைச்சர்களே !, ஏனைய உறுப்பினர்களே ! நாவிதன்வெளி பிரதேச மக்கள் என்றுமே மடயர்களே !! நாம் அவர்களை என்றும் மடையர்கள் வாழும் பிரதேச பட்டியலில் சேர்த்து நாம் மேதைகள் பட்டியலில் ஆகிவிடலாம் என்று எண்ணிக்கொண்டீர்களா? ? அல்லது நீங்கள் நாவிதன்வெளிக்கு சேவை செய்து நாவிதன்வெளி அபிவிருத்திஅடைந்து தன்னிறைவு பெற்ற பிரதேசமாக மாற்றி அமைத்துவிட்டீர்களா? அல்லது தேர்தல் காலத்தில் மட்டும் உல்லாசம் மேற்கொள்ளும் பிரதேச வலயமாக பிரகடணப் படுத்தியுள்ளீர்களா? 
முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என மார்பு தட்டும் நீங்கள் வரலாற்றில் ஒரு கொட்டுக்கூட இம்மக்களுக்கு தாகதத்திற்கு தண்ணீர் அருந்துவதற்கு அமைத்துள்ளீர்களா? தேர்தல் காலங்களில் மட்டும் வீதியில் காணப்படும்  பள்ளம், படுகுழிகளை கடந்து அல்லும் பகலும் அலைமோதும் நீங்கள் எம்மக்களது வாக்குகள் மூலம் உயர்பதவி பெற்று சிம்மாசனத்தை மாறி மாறி சூடேற்றிக்கொண்டிருக்கும் நீங்கள் வெற்றியின் பின்னர் இப்பிரதேசத்தில் வாழும் மூவின மக்களின் தேவை அறிந்து அதனை இனம் கண்டு வரலாற்றில் மக்களுக்கு பிரயோசனமான செயல் எதுவும் செய்துள்ளீர்களா? என நான் நாவிதன்வெளி மக்கள் சார்பாக பகிரங்க வினா தொடுக்க விரும்புகிறேன்.
நம்மை JHY_Fotor
கட்சி, இனம், மதம், மொழி, பிரதேசம் என வேறுபாடு இன்றி பிரயாணம் செய்யும் நாவிதன்வெளி பிரதான வீதிகளான 12ம் கிராமம் (கொலனி) 1ம் வட்டார  பிரதான வீதி, 2ம் வட்டார பிரதான வீதி, 3ம் வட்டார பிரதான வீதி, அஸ்-சிராஜ் வீதி, சவளக்கடை வீதி, 5ம் கொலனி வீதி, வீரதிடல் வீதி, 4ம் கொலனி வீதி, 15.ம் கொலனி விவகானந்தா வீதி, அண்ணாமலை வீதி,சொறிக்கல்முனை வீதி, ஏத்தல குல வீதி, இராணமடு பிரதேச வீதிகளான இவைகள் இப்பிரதேச மக்களின் பிரதான கேந்திர மையமான வீதிகளாகும். இவ்வீதிகள் சில மழைகாலம் வந்தால் உழுத வயல்நிலங்களை போலும் இன்னும் சில வீதிகள் பள்ளம் படுகுழிகளாக அமைந்து வீதியின் நடுவே சிறு குளங்களாக காட்சி அளிக்கின்றன. இன்னும் சில வீதிகள் மழை  நீரினால் கரைந்து சேற்று நிலமாக இதுவரை காலமும் காட்சி அளித்துக்கொண்டு இருக்கின்றன.
இப்பிரதேச மக்கள் அல்லல் படுகின்ற இவீதிகளை என்றாவது புனரமைத்து உள்ளீர்களா? அல்லது பார்வையாவது செய்துள்ளீர்களா?அல்லது கண்ணிருந்தும் குருடர்களாக உள்ளீர்களா? இவ்வீதியின் மூலம் தினம் பாடசாலை செல்லும் மாணவர்கள், தொழிலுக்கு செல்லும் விவசாயிகள், அரச ஊழியர்கள், வாகன சாரதிகள் உட்பட பலர் பலத்த துயரங்களை கால காலமாக எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வீதியின் அருகில் வாய்க்கால் அமைந்து காணப்படுவதனால் அவ்வாய்க்கால்கள் அருகில் அணைக்கட்டுகள் இல்லாத காரணத்தினாலும் வீதிகள் பழுதடைந்த வண்ணம் உள்ளன.இதனால் கடந்த காலங்களில் மக்கள் பல துயரங்களையும் அனுபவித்துள்ளார்கள் . இதுவே எமது நாவிதன்வெளி பிரதேசத்தின் கவனிப்பாரற்ற நிலைமை.
உங்களை நாம் நம்பி வாக்களித்த இப்பிரதேச மக்களாகிய எங்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு தேர்தல் காலங்களில் வழங்கிய பொய் வாக்குறிகள் மட்டும் தானா?நாங்கள் தேசியபட்டியல் கேட்கவில்லை வீதிகளைதான் சரிசெய்ய கேட்கிறோம்.
மாதா மாதம் காங்கிரசின் மத்திய கூட்டம், சங்கக் கூட்டம், இளைஞர் குழு கூட்டம் என்ற பெயரில் எமது நாவிதன்வெளி பிரதேச மக்களையும், இளைஞசர்களையும் மடையர் குழுக்களாக மாற்றி அமைக்கும் சாணக்கியம் உமக்கு மட்டுமே உண்டு எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இனிமேலும் இப்பிரதேச மக்கள் இச்சாணக்கியத்திற்கு அடிமையாக மாட்டார்கள் எனக் கூறிக்கொள்வதோடு, முஸ்லிம் காங்கிரசின் கோட்டைக்குள் பல ஓட்டைகள் காணப்படுகின்றன இவ்வோட்டைகளை அடைக்க முன்வாருங்கள்.
உங்களால் முடியாவிட்டால் தேர்தல் காலங்களில் வாக்குப்பிச்சை கேட்டு வராதீர்கள். எங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய எங்களால் முடியும் என தைரியத்துடன் தெரிவித்துக்கொள்வதோடு அதற்கான முயற்சிகளும் நடந்தேறிக்கொண்டு இருக்கின்றது.எங்களால் அமைக்கப் படவுள்ள தொழில் சாலை வருகை மூலம் இப் பகுதி அபிவிருத்தி அடையும் என்பதையும் கூறிக் கொள்ள விருபுகிறோம் . உங்களால் செய்ய முடியாவிட்டால் எங்களால் முடியும். 
கடந்த தேர்தல் காலங்களில் கோட்டையில் பல ஓட்டைகள் விழக்கூடியதாக காணப்படுகிறது அதனை தொடர்ச்சியாக ஓட்டையாக வைத்திருப்பதும் அல்லது கோட்டையாக மாற்றுவதும் உங்களது கைகளிலேயே தங்கி உள்ளது. என இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் (ஒட்டகம்) கல்முனை தொகுதி இணைப்பாளரும், அல்-மீசான் பௌண்டேசனின் கல்வித்துறைக்கான பிரதிப்பணிப்பாளருமான தஹிர் முஹம்மது சபீர் சகல மக்கள் பிரநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இவ்வீதியின் இந்த நிமிட காட்சிகளை உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம்.
தஹிர் முஹம்மது சபீர்