இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கீரி சம்பா 50 ரூபாவாகவும் சம்பா 41 ரூபாவாகவும் நாடு 38 ரூபாவாகவும் நிர்ணய விலையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி வழங்கப்படுவதோடு. புதிய தொழில்நுட்பத்தை கொண்ட மீனவ துறைமுகத்தை அமைப்பதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு இரண்டு வருட வரி நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைகளில் ´சிலோன் டீ´ என்ற பெயர் பொறிக்கப்படுவது கட்டாயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.