5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க திட்டம் ….!

lanka front news budget

 குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக எதிர்வரும் 5 ஆண்டுகளில் 1 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். 

பாவனையற்ற அரச காணிகளில் புதிதாக வீடுகள் நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். 

நிர்மாணத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கு 2 மாதகால பயிற்சி வழங்குவதுடன், மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 3 மாதங்களில் 7500 இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படுவதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படுவதற்காக 3 மாத கால பாடநெறிக்கு 15000 ரூபா அறவிடப்படுவதுடன் அதில் 50 வீதம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.