( LIVE ) 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் !

BUDGET 2015 LIVE

https://www.youtube.com/watch?v=_B3R4j_zYuE

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு செலவு திட்ட உரையை சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்தார். 

இதன்போது அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு, 

பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது அரசின் நோக்கமாகும். 

கடந்த அரசாங்கத்தைப் போல அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது. 

தமது புதிய அரசாங்கம் மூலம் தேசிய பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் வழங்கப்படும். 

எமது அரசின் நோக்கம் தவறிழைத்தவர்களை விடுதலை செய்வதல்ல, அவர்களுக்கு தண்டணை பெற்றுக் கொடுப்பதே. 

புதிய அரசாங்கம் பணவீக்கத்தை 2% ஆக குறைத்துள்ளதுடன் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை சராசரி 6% ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த அரசாங்கம் பல்வேறு புதிய வரிகளை அறவிட்டதே தவிர அந்த வரிகள் தொடர்பில் வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. 

தற்போதைய அரசாங்கத்தினால், அத்திவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு மற்றும் மட்டுப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள், திணைக்களங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

நாட்டில் தற்போது இருக்கும் கல்வி முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. 

சிறுநீரக நோய், புற்று நோய் மற்றும் டெங்கு போன்ற பயங்கரமான நோய்களை இல்லாதொழிப்பதற்கு நிரந்தர தீர்வொன்று அவசியமாகும். 

நகரங்களில் காணப்படும் புகையிரத சேவைகள் மற்றும் வீதிப் போக்குவரத்து முறைமைகளில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க முன்னர் சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

தனியார் துறையினருக்கு ஆக்கப்பூர்வமான ஓய்வூதிய திட்டம் ஒன்று உருவாக்கப்படும். 

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு மத்திய வங்கியினூடாக நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும். 

நன்றி – தெரன