வாகனங்களில் அதிக ஒலி எழுப்பப்படுவது இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்படும் என மத்திய சுற்றாடல் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டையில் இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கையின் பின்னர் அதிக சப்தத்தை எழுப்பும் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி எழுப்பிகள் அகற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு அதிக சப்தத்தை எழுப்பும் ஒலி எழுப்பிகளை வாகனங்களிலிருந்து அகற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய சுற்றாடல் பாதுகாப்பு சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.