மகிந்த ராஜபக்ச இன்று ஜனாதிபதி ஆணைகுழு முன் ஆஜரானார் !

அஸ்ரப் ஏ சமத்

இன்று (20) காலை 08.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மண்டபத்தில் உள்ள  ஜனாதிபதி விசாரணைக் கமிசன் முன் முன்னாள் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ச  சுயாதீன தொலைக்காட்சியில் ஜனாதிபதி தோ்தல் காலத்தில் விளம்பரப்படுத்தப்ட்ட விளம்பரத்திற்கு உரிய கட்டணம் செலுத்தாதையிட்ட விசாரணையின் இனறும் ஆஜரானாா். அவருடன்  பாராளுமன்ற உறுப்பிணா்கள் பேராசிரியா் ஜி. எல்.பீரிஸ், கெகிலிய ரம்புக்கல,  நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜ.ரீ.என். தலைவா் அநுர சிறிவா்ததனவும்  மற்றும் சட்டத்தரணிகளும் ஆஜரானாா்கள்
mahinda_fcd_001_Fotor
 இங்கு 08-30 மணி தொடக்கம் 12.00 மணிவரை விசாரணை நடைபெற்றது. விசாரணையின் பின் முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையில் 
இவ் விசாரணை மீண்டும்  டிசம்பா் 17,18ஆம் திகதிகளில் பிற்போடப்பட்டுள்ளது. இவ் வழக்கில் எனது பக்கம் எவ்வித ஓழுங்கீனம் நடைபெறவில்லை. 
ஊடகவியலாளா்   கேள்வி  –  தமிழ் அரசியல் கைத்திகள் விடுதலை செய்வதில் தங்களது கருத்து என்ன ?
பதில் –  பயங்கரவாதத்  தடைச் சட்டத்தின் கீழ்  இந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை பிடித்து சிறையில் அடைத்தோம் ஆனால் இந்த நல்லாட்சி அரசு  அவா்களை திறந்து வெளியில் விட்டுவிட்டு  பயங்கரவாதிகளை அடக்கிய ரணவிரு ராணுவத்தினா் பிடித்து சிறையில் அடைக்கின்றனா்.
ஊகடவியலாளா் கேள்வி – இந்த வரவு செலவுத்திட்டத்தினைப் பற்றி உங்கள் கருதது – நான் இந்த நாட்டு மக்களுக்க விவசாயிகளுக்கு பசளை போன்ற பல நன்மைகள் செய்தேம். இவைகள் ஒன்றம் இந்த அரசு இல்லாமல் செய்துள்ளது.

SAMSUNG CSC

SAMSUNG CSC