“வைத்தியசாலையின் குறை,நிறைகளை கண்டறிய ஏதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு சுகாதா பிரதியமைச்சர் ,மாகாண சுகாதார அமைச்சர் உட்பட உயரதிகாரிகள் குழு விஜயம்”
பழுலுல்லாஹ் பர்ஹான்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மீராவோடை பிரதேச வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளில் வைத்திய சேவையை பெறும் பொது மக்களின் நன்மை கருதி அங்கு நிலவும் ஆளணிப் பற்றாக்குறை , பிரசவ விடுதி இயங்காமை,வைத்தியர்கள் பற்றாக்குறை,பொதுச் சுகாதார மருத்துவ மாதுப் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகள் குறித்தும் விஷேடமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டதற்கான ஆவணங்கள் வைத்தியசாலையில் இல்லாமை போன்ற விடயங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் சிலர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் வேண்டுகாள் விடுத்தனர்.
திருகோணாமலையிலுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் மாகாண சுகாதார அமைச்சரை நேற்று 18 புதன்கிழமை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடிய போதே மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் சிலர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேற்படி ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
காத்தான்குடி தள வைத்தியசாலை தொடர்பில் ——
காத்தான்குடி தள வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் குறித்து தனக்கு இதுவரையில் யாரும் அறிவிக்கவில்லையெனவும் இது தொடர்பில் முதன் முதலாக மட்டக்களப்பு மாவட்ட ஊடவியலாளர்கள் சிலர்தான் இந்த குறைபாடுகள் குறித்து தெரியப்படுத்தினார்கள் என கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றது.
அதனை நான் நன்றாக அறிகின்றேன் அதிலும் விஷேடமாக காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள மக்கள் என்னோடு காத்தான்குடி தள வைத்தியசாலையைப் பற்றி பல விடயங்களை முன்னெடுத்து வைத்தார்கள்.
இருந்த போதிலும் தள வைத்தியசாலை என்று கூறுகின்ற பொழுது அந்த வைத்தியசாலையுடைய வசதிகள் ஒன்றும் இல்லாத நிலையில்தான் இன்று இத் தள வைத்தியசாலை பீ தரத்தில் காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் அங்கு ஆளணிகள் பற்றாக்குறைகள் இருக்கின்றது இல்லாமலில்லை .
இருந்த போதிலும் என்னுடைய வைத்திய துறைசார்ந்த உயரதிகாரிகளோடு இணைந்து காத்தான்குடி வைத்தியசாலையினுடைய ஊழியர்கள்,வைத்திய அதிகாரிகள்,தாதியர்கள் எல்லோரும் குறைபாடாக இருக்கின்ற போதிலும் எதிர்காலங்களில் அவ்வாறான குறைகளை நீக்கி முன்னெடுத்து செல்வதற்குரிய ஒரு சுகாதார அமைச்சராக நான் இருக்க விரும்புகின்றேன்.
அத்தோடு எதிர்வருகின்ற 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற சுகாதார பிரதியமைச்சர் பைஷல் காஷிம் உட்பட அங்கு இருக்கின்ற சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகாரிகள் எல்லோரும் சென்று காத்தான்குடி மாத்திரமல்லாமல் ஏனைய மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் திருகோணாமலை மாவட்டம் போன்ற பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இருக்கின்ற குறைகளை கண்டறிந்து அதனுடைய முன்னெடுப்புக்களை எடுப்பதற்குரிய ஆயத்தங்களை நாங்கள் செய்திருக்கின்றோம்.
நிச்சயமாக எதிர்வருகின்ற 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார பிரதியமைச்சரும், நானும்,உயரதிகாரிகளும் சென்று அந்த வைத்தியசாலையினுடைய குறைகளை கண்டறிந்து முன்னெடுக்குகின்ற வேலைத்திட்டங்களை செய்வதற்கு நான் என்னிருக்கின்றேன்.
அது மட்டுமல்லாமல் இங்கு புதிய அமைச்சர் நஸீர் அமைச்சராக இருக்கின்றார் எதை இந்ந மக்களுக்கு இந்த மாகாணத்திற்கு செய்யப்போகின்றார் என்ற எதிர்பாரப்;போடு இருக்கின்ற காரணத்தினால் இது கிழக்கு மாகாணத்திற்குரிய முக்கிய அமைச்சு என்ற அடிப்படையில் மக்களோடு,நோயாளிகளோடு முக்கிய பிரதான அமைச்சாக இருக்கின்ற பொழுது நான் இந்ந முன்னெடுப்புக்களை இரவு பகல் பாராது பணிகளை செய்வதற்கு ஆசைப்படுகின்றேன்,ஆயத்தமாக இருக்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேலும் தெரிவித்தார்.
மீராவோடை பிரதேச வைத்தியசாலை தொடர்பில்——-
மட்டக்களப்பு-ஒட்டமாவடி மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட தாதி உத்தியோகத்தர்கள் ,உத்தியோகத்தர்கள்,சிற்றூழியர் கள் ,தொழிலாளிகள் எல்லோரும் பற்றாக்குறையாக உள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் எல்லா வைத்தியசாலைகளிலும் பல குறைகள் இருப்பதாகவும் தெரிவித்த மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அதனை தான் புதிதாக சுகாதார அமைச்சைப் பொறுப்பேற்று இருக்கின்ற நிலையில் சுகாதாரத் துறையிலே வைத்தியசாலையில் இருக்கின்ற குறைகளை நிவர்த்தி செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்
விஷேடமாக கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற நிதி ஒதுக்கீடுகள் மிகவும் பற்றாக்குறையாக இருக்கின்ற நிலையில்; மீராவோடை வைத்தியசாலையுடைய நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது எனவும் அந்த வைத்தியசாலையில் ஏராளமாக நோயாளிகள் வருகின்றதையும் தான் கண்டிருப்பதாகவும் அந்த அடிப்படையில் மீராவோடை வைத்தியசாலையுடைய வைத்திய அத்தியட்சகரோடு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட போது வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள் குறைபாடு போன்ற பல்வேறு குறைபாடுகள் பற்றித்தான் வைத்திய அதிகாரிகள் என்னிடம் முறையிட்டார்கள்.
எனினும் நான் அந்த வைத்தியசாலைக்கு எதிர்வருக்கின்ற நாட்களிலே விஜயம் செய்து வைத்தியசாலையுடைய குறை,நிறைகளை அடையாளம் கண்டு முழுமையாக செய்யாவிட்டாலும் ஓர் அளவு அந்த வைத்தியசாலையுடைய முன்னெடுப்புகளை எடுப்பதற்குரிய ஆயத்தங்களை செய்வதாகவும் மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் மேலும் குறிப்பிட்டார்.