சிரியா மீது பிரான்ஸ், ரஷ்யா உக்கிர தாக்குதல் !

 

 images

சிரியாவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு வின் கோட்டையான ரக்கா நகரில் கடந்த மூன்று தினங்களால் இடம்பெற்றுவரும் உக்கிர வான் தாக்குதல்களில் அந்த அமைப்பின் குறைந்தது 33 உறுப்பினர்கள் பலியாகி இருப்பதாக சிரியா தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் குழு குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு வெளி யிட்டிருக்கும் தகவலில், பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளின் போர் விமானங்கள் ஐ.எஸ். சோத னைச் சாவடிகள் மீது நடத்திய தாக்குதல்களி லேயே பெரும்பாலான போராளிகள் கொல்லப்பட் டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல்களில் 129 பேர் கொல்லப்பட்ட சம்பவத் திற்கு பின்னர் அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். குழுவை இலக்கு வைத்து பிரான்ஸ் போர் விமானங்கள் தாக்குதல்களை அதிகரித்துள்ளன.

இதேவேளை ஐ.எஸ். குழு மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அவர்களுக்கு எதிராக நீண்டதூர ஏவுகணை களையும் குண்டு வீச்சுக்களையும் நடத்தியுள்ளது என பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளி யான தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் n’hய்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐ.எஸ். அமைப்பினர் பலமாக இருக்கும் ரக்கா மற்றும் டியர் எஸ் ஸார் பகுதிகளிலுள்ள அவர் களின் இராணுவ நிலைகள் மீது தமது விமானங்கள் ஏவுகணைகளை வீசின என்றும் வடக்குப் பகுதியில் குண்டு வீச்சுக்கள் நடை பெற்றன என்பதையும் அவர் உறுதி செய்தார்.

கடந்த மாதம் எகிப்திலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று பயங்கரவாத தாக்குதல் காரண மாக விழுந்து நொருங்கியதற்கு தாமே காரணம் என ஐ.எஸ். அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அந்த அமைப்பின் மீது பழி வாங்குவது தவிர்க்க முடியாதது என ரஷ்ய ஜனாதிபதி விளாமிர் புட்டின் ஏற்கனவே எச்சரித் திருந்தார்.

சிரியாவை தலைமையகமாக கொண்டு செயல் படும் ஐ.எஸ். குழுவின் மீது பல நாடுகள் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ரக்கா நகரில் சர்வதேச தாக்குதல்கள் தீவிரம் அடைந்த நிலையில் ஐ.எஸ். அங்கு தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து தப்பி வந்த குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு சிரிய நகரான இங்கு வசிக்கு சுமார் 350,000 வான் தாக்குதல்களால் உயிரச்சுறுத் தலுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

ரஷ்யா மற்றும் பிரான்ஸின் நடந்த வான் தாக்குதல்களால் நகரம் முழுமையாக அதிர்ந்து வருவதாக ரக்கா வாசிகள் விபரித்துள்ளனர். இதில் அமெரிக்க ஆதரவு குர்திஷ் படையினர் நகரில் தரைவழி தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் குடியிருப்பாளர்கள் மோதலில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து அதிகரித்துள்ளது.