குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க வேண்டியது மிக அவசியம் !

images

ஒவ்வொரு நாளும் காலை வேளையில் சத்தான உணவை உண்பதை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக்கூடாது என ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் நமக்கு தெரிவித்துள்ளன.

பள்ளி செல்லும் குழந்தைகளிடையே காலை உணவின் முக்கியத்துவத்தை பற்றி வேல்ஸ் நாட்டின் கார்டிப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நடத்தியது.

இந்த ஆய்வு நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் 9 -11 வயதுள்ள சுமார் 5000 சிறுவர், சிறுமியரிடையே 6 – 18 மாதங்களுக்கு நடத்தப்பட்டது.

இனிப்பு மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, காலை வேளையில் சத்தான ஆகாரத்தை உட்கொள்ளும் குழந்தைகளின் செயல்திறன் சீராக இருந்தது.

இதனால், பாடத்தை கவனத்துடன் கற்றதுடன், வீட்டுப் பாடங்களையும் முறையாக கற்றனர் என இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.