மஹிந்தவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு !

mahinda
பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலத்தைப் பெறும் நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. 

எதுஎவ்வாறு இருப்பினும் அத்தியவசிய ஆவணங்கள் சிலவற்றை பிரதிவாதி தரப்பிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையால் சாட்சி விசாரணைகளை நாளை வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக, பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை ரத்னா லங்கா நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்ய, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஷங்க சேனாதிபதி நாளைய தினம் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.