உயர்நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்திரசிறியை நியமிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்புச் சபை இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த கே.டி.சித்திரசிறி உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி கிடைத்துள்ளது.