ஐ.எஸ் பிடியில் இருந்த சீனா, நோர்வே நாடுகளை சேர்ந்த 2 பிணைத் கைதிகள் கொலை !

88919c5e-07ec-40a2-831d-fffa6f5fe4d6_S_secvpf

 

 ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் இருந்த சீனா மற்றும் நார்வே நாட்டினை சேர்ந்த 2 பிணைக் கைதிகளை கொலை செய்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் குறிப்பிட்ட பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் அவர்களின் முகாம்கள் மீது ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடந்த சில மாதங்களாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதற்கு பழிவாங்கும் வகையில் தங்கள் பிடியில் உள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பிணைக்கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் பிடியில் இருந்த சீனா மற்றும் நார்வே நாட்டினை சேர்ந்த 2 பிணைக் கைதிகளை கொலை செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு கொலை செய்யப்பட்ட பிணைக் கைதிகளின் படங்களுடன் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட பிணைக் கைதிகளில் ஒருவர் நார்வே நாட்டை சேர்ந்த ஜோகன்48), மற்றொருவர் சீன நாட்டை சேர்ந்த ஜின்குவாய்(50). 

முன்னதாக, கொலை செய்யப்பட்ட இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் முதலாக  ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வந்தனர்.
பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட பின், ஐ.எஸ் அமைப்பின் தபிக் என்ற ஆன்-லைன் இதழில் வெளியான செய்தியில், இருவரது படமும் கைதிகள் விற்பனைக்கு என்ற வாசகத்துடன் வெளியானது. 

ஐ.எஸ் தீவிரவாதிகள் பாரிசில் நடத்திய தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த ஒருவாரத்திற்கு இப்படி ஒரு செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.