திஸ்ஸமகாரம குடிநீர்த்திட்டத்திற்கு 3930 மில்லியம் ரூபா நிதி ஓதுக்கீடு !

அஷ்ரப். ஏ. சமத்

நேற்று அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும்போது திஸ்ஸ மகராம மக்கள் பருகும்  அசுத்த நீர் குப்பிகளைக் கொண்டு சென்று  முழு அமைச்சரவைக்கும்  காட்டினேன். இப்பிரதேசத்தில் சிறுநீரக நோய்க்குள்ளாக்கப்பட்டுளள மக்கள் பற்றியும் உரையாற்றினேன்.   அதன் நிமிா்த்தம்  அமைச்சரவை உடனடியாக 3930 மில்லியம் ருபாவை திஸ்ஸமகாரம  குடிநீா்த்திட்டத்திற்கு நிதி ஓதுக்கித் தந்தது. என. அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா். 
SAJITH PREMA
மேற்கண்டவாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைசச்சா் சஜித் பிரேமதாச இன்று(19) பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள அவரது  அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே தெரிவித்தாா்.
அங்கு தொடா்ந்த உரையாற்றிய அமைச்சா் தெரிவித்தாவது – 
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸ மகாராமையில் வாழும் 45 ஆயிரம் குடும்பங்கள்  சேறு, புழுதி படிந்த நீரை  பருகி  ஆயிரக்கணக்கானோா்  சிறுநீரக நோயினால் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனா்.  அவா்கள் பருகும் நீரையையே  இரண்டு போத்தலில் கொண்டு வந்து நேற்று(18) ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கு கொண்டு வந்து  ஜனாதிபதி, பிரதமந்திரி, நிதி அமைச்சா்,  நீர்விநியோக வடிகாலாமைப்பு அமைச்சரிடம் காண்பித்தேன்.  

 இதனை ஏற்றுக் கொண்ட அமைசச்ரவை உடனடியாக 3930 இலட்சம் ருபாவை திஸ்ஸமகராம நீர்விநியோகத்திற்கு நிதி ஒதுக்கித் தந்தாா்கள். 

இதனால் சேறு, புழுதி நீரை பருகிவரும் 30 ஆயிரம் குடும்பங்களும் மேலும் 15 ஆயிரம் குடும்பங்களும் இத்திட்டத்தினால் நன்மை யடைகின்றனா்.  
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஹம்பாந்தோட்டையில் சர்வதேச துறைமுகம், விமான நிலையம், மகிந்த ராஜபக்ச மைதாணம், கூட்ட மண்டபம், மேம்பாலம் போன்றவற்றுக்கு பாரிய நிதி செலவழித்தவா்கள் அந்தப் பிரதேசத்தின் வாழ் மக்களின் அடிப்படை உரிமையான குடி நீர் பிரச்சினையை தீா்த்து வைக்க வில்லை.

இந்த நல்லாட்சியில் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து  அவற்றுக்கு உதவும் ஒரு அரசாங்கமாகும்.  உடன் இத் திட்டத்திற்கு ஜனாதிபதி பிரதமா் மற்றும் நிதியமைச்சா் ரவி கருநாயகக  நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சா் ரவுப் ஹக்கீம் ஆகியோறுக்கும் இப் பிரதேச மக்கள் சாா்பாக நன்றி தெரிவிப்பதாக அமைச்சா் சஜித் பிரேமதாச மேலும்  தெரிவித்தாா்.