ரஷ்ய விமானத்தை விழ்த்தியது எப்படி ? ஐ.எஸ். அமைப்பின் விளக்கம் !

எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31–ந்தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர்.

russiya flight

விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகும். அந்த விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் உடனே அறிவிக்கவும் செய்தனர். இந்நிலையில், விமானத்தை தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மூலம் வெடித்து சிதற வைத்துள்ளனர். விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து ஒரு பயங்கரவாத தாக்குதலே காரணம் என சில நாட்களுக்கு முன் ரஷ்ய அரசு அறிவித்தது.

இந்நிலையில் ஆங்கிலத்தில் வெளியாகும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இதழ் ஒன்றில் ரஷ்ய விமானத்தை விழ்த்தியது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனம் ஒன்றின் அன்னாசி பழச்சாறு பாட்டிலில் வெடிக்குண்டுகளை மறைத்துவைத்து, விமானத்திற்குள் எடுத்து சென்று வெடிக்கவைத்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமான படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும் ஷரம்–எல்–ஷேக் விமான நிலையித்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி வெடிகுண்டை எவ்வாறு விமானத்திற்குள் எடுத்து சென்றார்கள் என்பது பற்றியும் அந்த இதழில் கூறப்பட்டுள்ளது.