நாசா தனது விண்வெளி மையத்திலுள்ள ஆய்வுக் கூடத்தில் பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது !

flowers

 விண்வெளியில் பூச்செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது நாசா.

இதன் முதற்கட்டமாக நாசா தனது விண்வெளி மையத்திலுள்ள ஆய்வுக் கூடத்தில் பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது.

இந்த பூச்செடிகள் தற்போது அழகாக வளர்ந்து வருவதாகவும், ஜனவரி மாதத்தில் பூக்கள் பூக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி வெற்றியடைந்தால் 2017 ஆம் ஆண்டளவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தக்காளிச் செடியை நட்டு பரிசோதனை செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது.

Zinnia எனப்படும் பூச்செடிகளின் விதைகளை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நட்டு, அது செடியாக வளர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு செயற்கை வெப்பம் மற்றும் தண்ணீர் ஊற்றப்படுகிறது.