தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபைக்கு தலைவராக பேராசிரியர் ரவீந்திர பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்த கடிதம் ரவீந்திர பெர்னான்டோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபைக்கு தலைவராக திலங்க சமரசிங்க கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே, அந்த சபையின் புதிய தலைவராக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத் நியமிக்கப்பட்டார் என அண்மையில் சர்ச்சைகள் எழுந்தன.
இதனையடுத்து கருத்து வௌியிட்ட வைத்தியர் திலங்க சமரசிங்க தன்னைத் தொடர்ந்தும் தலைவராக செயற்படுமாறு பிரதமரால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபைக்கு தலைவராக பேராசிரியர் ரவீந்திர பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது