தொடரும் பதற்றம்: நெதர்லாந்து-ஜெர்மனி இடையிலான கால்பந்து போட்டி திடீர் ரத்து !

SOCCER Germ_11 

 நட்பு ரீதியில் நெதர்லாந்து-ஜெர்மனி இடையே நடைபெற இருந்த கால்பந்து போட்டி பாதுகாப்பு பிரச்சனை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜெர்மனி அணியும் பிரான்ஸ் அணியும் பங்கேற்ற கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். மேலும் பாரிஸின் பல இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை கண்டிக்கும் விதமாகவும், பிரான்ஸ் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், நேற்று இரவு (17-11-15) நெதர்லாந்து-ஜெர்மனி இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

2E8A2E9F00000578-3322536-Police_gather_outside_the_stadium_after_the_match_was_cancelled_-a-35_1447786573140
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெறவிருந்த இந்த போட்டியில் சுமார் 49 ஆயிரம் ரசிகர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பாக்கப்பட்டது. மேலும் ஜெர்மனியின் பிரதமர் அங்கேலா மேர்க்கெலாவும் போட்டியை காணவருவார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1447792035517