பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று ரெயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலியாகினர்.
பலூசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டி நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை போலான் மாவட்டத்தில் உள்ள அபிகம் பகுதியில் இன்று தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்றது.
இதில் அந்த ரெயிலின் நான்கு பெட்டிகள் குப்புற கவிழ்ந்தன. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற ரெயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேற்கண்ட ரெயிலின் பிரேக் செயலிழந்துப் போனதால் இச்சம்பவம் நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.