அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜோன்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதான ஜோன்சன், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் வீழ்த்திய ஒரு விக்கெட்டை சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம், ஷேன் வோர்ன்-708, மெக்ராத்-563, டென்னிஸ் லில்லி-355 ஆகியோருக்கு அடுத்தபடியாக, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜோன்சன் பெற்றுள்ளார்.
ஜோன்சன் கூறுகையில், பெர்த் நகரில் எனது ஓய்வை அறிவிப்பதில் மகிழ்ச்சி. அதிக நாட்கள் யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என்றார்.