ஒருங்கிணைந்த இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சோமர்செட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சோமர்செட் கவுன்டியின் சர்ரே என்ற பகுதியில் இருந்து டங்கேஸ்வெல் என்ற இடத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் சர்ச்இன்போர்ட் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.
6 பேர் பயணித்த அந்த விமானத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியானார்கள். இதனைத்தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.