ஊடகத்துறைக்கு ஆற்றும் உயர் பணிக்காக பாத்திமா றிஸ்வானாவுக்கு லக்ஸ்டோவின் ‘கலைச்சுடர்’ எனும் உயர் விருது!

 

-எம்.வை.அமீர்-

கடந்த 19 வருடங்களாக இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குவது போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வரும் லக்ஸ்டோ ஊடக வலையமைப்பு தனது பணிகளில் 10 வருடங்களாக திறமைகளை தேடி கௌரவிக்கும் பாரிய பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.

தனது ஊடக வலையமைப்பினூடாக ஊடக பயிற்சியை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு 14-11-2015 அன்று நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர் பாடசாலையில், லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாமஸ்ரீ மருதூர் ஏ.எல்.அன்சார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பயிற்சி பெற்ற 50 பேருக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திறமையாளர்களுக்கு உயர் விருதுகளும் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச செயலாளர், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்கள் என பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்கள் வீற்றிருந்த இச் சபையில் ஊவா சமூக வானொலியின் சிரேஷ்ட தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான எம்.எப்.பாத்திமா றிஸ்வானா அவர்களுக்கு லக்ஸ்டோ ஊடக வலையமைப்பினால் ‘கலைச்சுடர்’ எனும் உயர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரபலங்களின் பாடல்கள், கவியரங்கு வாங்க பழகலாம் குழுவினரின் நாடகம் இளம் அறிவிப்பாளர்களின் அரங்கேற்றம் என்பனவும் இடம்பெற்றது.

11_Fotor_Collage_Fotor