குண்டுவெடிப்பில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு ரத்தம் கொடுக்க வரிசையில் காத்திருக்கும் பாரிஸ் மக்கள்!

 

பாரிஸ் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு இதுவரை 128 பேர் பலியாகியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுமார் 350 பேர் இங்குள்ள பல ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சையளித்து வருகின்றனர்.

4b213438-a9ce-4c41-af68-128af2c6b36a_S_secvpf
‘காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்ற ரத்தம் தேவை’ என இந்நாட்டின் முக்கிய ஊடகங்களில் நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியாகி வெறும் ஒரு மணிநேரத்துக்குள் நூற்றுக்கணக்கான மக்கள் ரத்ததானம் அளிக்க இங்குள்ள முகாம்களை அணுகினர்.

இந்நாட்டின் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருந்தார். எனினும், மக்கள் ஆர்வத்துடன் வெளியில் வந்து காயம்பட்டவர்களை காப்பாற்றும் நோக்கில் ரத்ததானம் அளித்தனர்.

இதன்மூலம், தேவையான அளவுக்கு ரத்தம் சேகரிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.