ஜனாதிபதியின் பதில் திருப்தியாக அமையாவிட்டால் மரணத்தைத் தழுவவேண்டிய நிலைமையே ஏற்படும்!

 

ஜனாதிபதியின் பதில் திருப்தியாக அமையாவிட்டால் மரணத்தைத் தழுவவேண்டிய நிலைமையே ஏற்படும் என சிறைச்சாலைகளில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர். 

474284813Untitled-1

இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதன்போது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி பதில் தருவதாக தெரிவித்துள்ளார். அது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு பதிலளிக்கையில், உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் சிறைச்சாலைகளில் படும் அவலங்கள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. அரசியல் கட்சிகள் அறிக்கையிடும் அரசியலை மேற்கொள்கின்றார்கள். அரசியல் கைதிகள் குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 

ஆயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதில் உறுதியான பதிலாக அமையாவிட்டால், உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் மரணத்தினை தழுவவேண்டிய நிலமையே ஏற்படும் என்றும் அவர்கள் கூறினார். 

ஜனாதிபதியின் பதில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய பதிலாக இருக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.