பதவிகளை துறக்க TNA தீர்மானம் : செல்வம் அடைக்கலநாதன் !

selvam-adaikalanathan3

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் அரசாங் கம் தீர்க்கமான முடிவைக் காண முயற்சிக்காவிடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றிருக் கும் சகலவிதமான பதவிகளையும் துறக்க தயாராகி வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாங்கள் இந்த அரசுக்கு தொடர்ந்தும் ஆதரவு நல்க வேண்டுமா? இல்லையா? என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். எங்கள் தலைவர் இரா. சம்பந்தன் சுகயீனம் காரண மாக சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் மீண்டும் நாடு திரும் பியவுடன் கூட்டமைப் பினராகிய நாங்கள் கூடி ஆராய்ந்து காரசாரமான முடிவொன்றை எடுக்க காத்திருக்கிறோம்.

அரசாங்கம் தொடர்ந்தும் தனது நிலைப் பாட்டிலிருந்து மாற்றுத் தன்மை பெறவில் லையாயின் அது எமது நிலைப் பாட்டை மாற்றும் நிலைக்கு கொண்டு செல்லும். அரசியல் கைதிகளை மூன்றாக தரம்பிரித்து அவர்களை விடுவோம். இவர்களை விடமாட்டோமென்று அரசாங்கம் கூறுவதெல்லாம் எம்மால் எற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். எமது கோரிக்கை அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்பதாகும். இந்நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக் கிறோம்.

இதில் ஆச்சரியம் தரும் விடயம் என்ன வென்றால் பிணையில் விடுதலை செய்ய அரசு முற்பட்டவர்களுக்கும் கடுமையான நிபந்தனை இடப்பட்டுள்ளது. 10 இலட்சம் ரூபா சரீரப்பிணை கையெழுத்து இட வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கடுமையான நிபந்தனைகளுடன் அவர்களை பிணையில் விடுவது என்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். எம்மைப் பொறுத்தவரை 14 சிறைகளிலுமுள்ள 217 கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

நாம் நடத்தும் போராட்டங்களுக்கு வடக்கு கிழக்கு மக்கள் மாத்திரமல்ல வெளியே பரந்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் உதாசீனம் செய்வது மிகுந்த கவலையையும் வேதனையையும் தருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காது மெளனம் சாதித்து வருகின்றார். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எங்களை அவமதிப்பதான செயலாகவும் விசனத்துக்குரிய செயற்பாடாகவுமே நோக்குகின்றோம். கவனயீர்ப்புப் போராட்டம் தொடக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் சமிக்ஞையைப் பொறுத்து இப்போராட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்போம்.

எங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கைகளிலும் அதன் தீர்மானத்திலுமே தங்கியிருக்கிறது. அரசாங்கம் சாதகமான பதில் ஒன்றைத் தராவிடின் இப் போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.