உதவும் நாடுகளில் இலங்கை 8வது இடத்தில் …!

 

‘உலக கொடுக்கும் சுட்டெண் 2015’  (World Giving Index 2015) இன் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் இலங்கை 08 ஆவது இடத்திலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உதவும் தொண்டு அறக்கட்டளை நிறுவனம் (Charities Aid Foundation) நடாத்திய  ஆய்வொன்றிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அது ஒவ்வொரு நாட்டினதும் கொடுக்கும் செயற்பாடு மற்றும் அதன் ஈடுபாடு என்பவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கியுள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் (2010-2014) உலக கொடுத்தல் சுட்டியின் அடிப்படையில் 9 ஆவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது.

145 நாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒவ்வொரு நாடும் வழங்கிய நன்கொடைகள் அத்துடன் உதவி நடவடிக்கைகளுக்காக அது செலவிட்ட நேரம், உதவி தேவைப்படும் நேரத்தில் முன்வந்து உதவுதன் போன்றவை கருத்திற் கொள்ளப்பட்டது. 

மியன்மார் மற்றும் அமெரிக்கா ஆகியன முதல் இரு இடங்களில் காணப்படுகின்றன. ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து ஆகியன  6 ஆம், 7 ஆம் இடங்களை பெற்றுள்ளன.

மேலும் இலங்கை உதவிக்காக செலவிடும் தன்னார்வ நேரத்தின் (Volunteering Time Score)அடிப்படையில் (முதலிடத்திலுள்ள) மியன்மார் 50மூ புள்ளிகளைப் பெற்றுள்ளதோடு, இலங்கை 48 வீத புள்ளிகளை பெற்றுள்ள வேளையில், அமெரிக்கா 44 வீதமும் ஐக்கிய இராச்சியம் 32 வீதமுமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இப்பட்டியலின் இறுதி இடத்தில் யெமனும் அதற்கு முதலிடங்களில் சீனா, பல்கேரியா, ஜோர்தான், மொரோக்கா ஆகியன இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.