அக்கரைப்பற்று அஸ் சிறாஜ் மகா வித்தியாலய மைதான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு !

சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு 
அக்கரைப்பற்று அஸ் சிறாஜ் மகா வித்தியாலய மைதான அபிவிருத்திக்கு முதற்கட்டமாக ரூபா 5 இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று செவ்வாய்கிழமை (10) தெரிவித்தார்.
nazeer_Fotor
அக்கரைப்பற்று அஸ் சிறாஜ் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய, மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் சாதனை படைத்த சாதணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வுக்கு கலந்துகொண்டபோது அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும், பாடசாலை மைதான அவல நிலைமை பற்றிய குறைபாடுகளை பாடசாலை குழாமினர் எடுத்துரைத்ததையடுத்து அன்றைய தினம் அம்மைதானத்தை பார்வையிட்ட பின்னரே இந்நிதியினை வழங்குவதாக அப்பாடசாலையின் அதிபர் குழாமினரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாகவே அஸ் சிறாஜ் மகா வித்தியாலய மைதான அபிவிருத்திக்கு ரூபா 5 இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பாடசாலையின் மைதானம் சாதாரண மழை பெய்தாலும்கூட நீரில் மூழ்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.