வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு வடக்கே 250 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம்,நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.