உங்களது குரலாக நான் என்றும் இருப்பேன் -ஏ.எம்.எம். தில்சாத்

 

எஸ்.அஷ்ரப்கான்

 

கல்முனை தொகுதியின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவாவதற்கு உதவிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் அதற்காக அர்ப்பணித்த எனது அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றேன் என கல்முனை தொகுதி சார்பாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான ஏ.எம்.எம். தில்சாத் நன்றி தெரிவித்தார்.

uu

அவர் மேலும் குறிப்பிடும்போது,

இளைஞர்கள் எல்லோரும் சமூகத்தின் தேவை கருதி ஒன்றித்து பயணிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு என்றும் களங்கம் ஏற்படாமல் இருக்க அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். அத்துடன் உங்களது மேலான ஒத்துழைப்பு எனக்கு என்றும் தேவையாகும்.

எனது இவ்வெற்றியானது உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன், அத்துடன் இது உங்கள் ஒவ்வொருவரினதும் வெற்றியாகும். உங்களது குரலாக நான் என்றும் இருப்பேன். மட்டுமல்லாது எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அத்தனை இளைஞர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன்.

இத்தேர்தலில் என்னுடன் போட்டியிட்ட சக வேட்பாளர்களையும் எதிர்காலத்தில் அரவணைத்து செல்ல என்னால் முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது இதற்காக எமது ஒற்றுமைதான் நாம் கொண்டுள்ள மிகப்பெரும் பலமாகும்.

சாய்ந்தமருது, கல்முனைக்குடி மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு நீலாவணை ஆகிய எமது கல்முனை தொகுதியின் அத்தனை ஊர்களில் இருந்தும் எனக்காக ஆதரவு வழங்கிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் கனிந்த நன்றியினை தெரிவிக்கிறேன்.

குறிப்பாக இரவு, பகல் பாராது எனது வெற்றிக்கு முழுமையாக பங்களித்த இளைஞர் கழக உறுப்பினர்கள், நண்பர்கள், சகோதரர்கள் அத்தனை போரையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அத்துடன் என்னை உற்சாகமூட்டி வழி நடத்திய அனைத்து தரப்பினருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

எதிர்காலத்தில் இளைஞர் சமூகத்தை மிகவும் சிறப்பாக திட்டமிட்டு வழிகாட்ட நாம் அனைவரும் வேறுபாடுகள் களைந்து செயல்பட இச்சந்தர்பத்தில் நான் அனைத்து இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். அத்துடன் இளைஞர்களை எமது சமூகத்துக்கும் தேசிய வேலைத் திட்டத்துக்கும் நாம் தயார்படுத்துவோம்” என்றும் குறிப்பிட்டார்.