சோபித தேரரின் மறைவுக்கு முதலமைச்சரின் அனுதாபச் செய்தி!

 

சமத்துவ நீதிக்கான இயக்கத்தின் தலைவர் சோபித தேரரின் மறைவு இலங்கைவாழ் அனைத்து சமூகத்தினருக்கும் பாரிய இளப்பாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளர்.

சோபித தேரர் பெளத்த மதத்தை சார்ந்தவராக இருந்த போதிலும் ஏனைய இன மக்களுடனும் அவ்வினத்தைச் சார்ந்த தலைவர்களுடனும் நல்லுறவைப் பேணியவர். சிறுபான்மை சமூகத்தின் நலவுரிமை பாதுகாக்கப் படவேண்டும் என அடிக்கடி வலியுறுத்தி வந்ததுடன் அவற்றை செயலுருப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். மகிந்த ராஜபக்‌ஷவின் அரசு சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு அநீதிகள் இளைத்த போது அவற்றுக்கு எதிராக துணிந்து குரல்கொடுத்தவர்.

images

இந்த நாட்டில் நல்லாட்சி அரசு ஒன்று உருவாக வேண்டும் என்று பல்வேறு கொள்கைகளையுடைய கட்சிகளையும் அக்கட்சிகளின் தலைவர்களையும் ஒன்றினைத்து பலதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வெற்றி கண்டவர்.

தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சிக்கு அவரே வித்திட்டவர் என்று துணிந்து கூறலாம். மொத்தத்தில் இன்று சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் எந்த விதமான அச்சமுமின்றி நின்மதியுடன் வாழ்வதற்கு சோபித தேரரின் முயற்சிகளே வழிகோளின என்று தனது அநுதாபச்செய்தியில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.