செம்மண்ணோடை குபா ஜூம்ஆ பள்ளி வாயல் வீதியின் இன்றைய நிலமையே இது…….!

ஓட்டமாவடி எம்.என்.எம்.யாசீர்

மட்டக்களப்பு மாவட்டத்தின்   கல்குடா தேர்தல் தொகுதியின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கோறளைப்பற்று பிரதேச சபைக்குற் பட்ட முஸ்லிம்கள் கணிசமாக வாழக் கூடிய கிராமம்தான் இந்த  செம்மண்ணோடையாகும்

இந்த கிராமம்  கல்வி சார் துறைகளில் பல்வேறு இளம் இளைஞர்களையும் யுவதிகளையும் உருவாக்கி கல்குடா மண்ணுக்கு பெருமை சேர்த்து தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதே

இந்த செம்மண்ணோடை கிராமத்தின்  குபா ஜூம்மா பள்ளிவாயல் வீதியின் இன்றைய நிலையே இதுவாகும்  இவ்வீதியை செம்மண்ணோடை  அல்-ஹம்றா பாடசாலைக்கு செல்கின்ற மாணவ மாணவிகள் தொழில் புரிவோர்கள் மற்றும்   குறிப்பாக பள்ளிவாயல்களுக்கு சொல்வோர்கள் என்று பலரும் பல் வேறு அசோகரியத்துக்கு மத்தியில் உபயோகித்து வருகிறார்கள்

இது இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சினை அல்ல கடந்த கால அரசாங்கம் தொட்டு இன்று வரை இந்த பிரச்சினைக்கு எந்தவீத தீர்வும் யாராலும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது கவலைக்குறிய விடயமே எமது ஊரில் பல முக்கிய பிரமுகர்கள் புத்தி ஜீவிகள் தொண்டுநிறுனங்கள் பலவும் இருந்த போதிலும் அவர்களால் கூட இப்பிரச்சினைக்குத்  எந்த வீத மாற்று வேளைகளும் முன்னெடுக்கப்பட வில்லை என்பதை நாம் அறிந்ததே

உண்மையில் ஒரு ஊர் சார்ந்த பொது நல வேளைகள் என்று வரும் போது அதை ஒரு தனி மனிதனாலோ தனி  நிறுவனம் ஒன்றால் மாத்திரமோ செய்ய முடியாது என்பது  வெளிப்படையான உண்மையே மாறாக  அதை தனது தாட்டின் அரசாங்கத்தின் நிதியிலிருந்து புரட்டித்தான் செய்ய வேண்டும் என்பதில் எந்தவீத ஆட்சேபனுமுமில்லை ஆனால் அதன் வேளைப்பாட்டை உரிய அதிகாரிகளிடத்தில் எமது ஊரில் எவ்வளவு படித்த மட்டங்கள் பிரமுகர்கள் இருந்து கொண்டு செல்ல முடியாமல் போயுள்ளதையே  நான் இங்கு கவலையுடன்  சுட்டிக் காட்டியுள்ளேன்

கல்குடா தொகுதியில் ஒரு பின் தங்கிய கிராமமாக இது இருந்தாலும் கூட  இது நாளா பக்கமும் முஸ்லிம்கள் வாழக் கூடிய கிராமமாகும் ஆகவேதன் மனத் தன்மைக்குள் நின்று நாம் சிந்திக்க வேண்டும் எமது சகோதர சகோதரிகள் திடீர் விபத்துள்ளாகி ஒரு அவசர சிகிச்சைக்காக  வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதென்றால்  கூட எவ்வளவு சிரமங்களை மேற் கொள்ள வேண்டுமென்று சிந்தித்துப் பாருங்கள்….?  உண்மையில் இது இந்த ஊரில் வாழக் கூடிய அனைத்து விதமான மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் விடயமாக கடந்த காலம் தொட்டு இருந்து வருகின்றது

எனவேதான்   கிழக்கு மாகாண முதலமைச்சர்  கௌரவ நஸீர் ஹாபீஸ் அவர்களும்  மற்றும்  மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் ஏனைய  உரிய அதிகாரிகளும்  கவனம் செலுத்தி இவ்வீதியை வடிகானுடன் கூடிய வீதியாக செப்பண்ணிட்டு தருமாறு கல் குடா வாழ் ஒருவன் என்ற வகையில் பனிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

IMG-20151105-WA0009_Fotor IMG-20151105-WA0008_Fotor