ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை!

ஜெம்சாத் இக்பால்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை இன்று கண்டி பொல்கொல்லையில் 26ஆவது பேராளர் மாநாட்டில் வைத்து அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26ஆவது பேராளர் மாநாடு கண்டி பொல்கொல்லை, தேசிய கற்கை நிலையத்திலுள்ள மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (07) பிற்பகல் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
1H6A5789_Fotor
இதன் முதல் அமர்வில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.
இம்முறை புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்வதற்கான அதிஉயர் பீடக் கூட்டம் நேற்றிரவு கண்டி ஓக்ரே ஹோட்டலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தலைவராக 15ஆவது தடைவையாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவு}ப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, 26 உறுப்பினர்களின் பெயர் விபரங்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.
இதன் பிரகாரம் புதிய நிர்வதக சபை உறுப்பினர்களின் முழு விபரங்கள்
தலைவர் – ரவூப் ஹக்கீம்
தவிசாளர்  – பஷீர் சேகுதாவூத்
பொதுச் செயலாளர் – எம்.ரீ.ஹஸனலி
சிரேஷ்ட பிரதித் தலைவர் – ஏ.எல்.ஏ.மஜீத்
பிரதித் தலைவர் 1 – ராவூத்தர் நெய்னா முஹம்மது
பிரதித் தலைவர் 2 – ஹாபிஸ் நசீர் அஹமட்
பிரதித் தலைவர் 3 – யூ.டீ.எம்.அன்வார்
பிரதித் தலைவர் 4 – எச்.எம்.எம்.ஹரீஸ்
பொருளாளர் – எம்.எஸ்.எம்.அஸ்லம்
மஜ்லிஸுல் ஸுரா தலைவர் – ஏ.எல்.எம்.கலீல் மௌலவி
தேசிய ஒருங்கிணைப்பாளர் – எம்.ஐ.எம்.மன்சூர்
கொள்கைப் பரப்புச் செயலாளர் – யூ.எல்.எம்.என்.முபீன்
தேசிய அமைப்பாளர் – சபீக் ரஜாப்தீன்
சர்வதேச விவகாரப் பணிப்பாளர் – ஏ.எம்.பாயிஸ்
யாப்பு விவகாரப் பணிப்பாளர் – எம்.பி.பாறூக்
இணக்கப்பாட்டு வாரியம் – எம்.எஸ்.தௌபீக்
உலமா காங்கிரஸ் – எச்.எம்.எம்.அல்யாஸ் மௌலவி
அரசியல் விவகாரப் பணிப்பாளர் – எஸ்.எம்.ஏ.கபூர்
பிரதித் தவிசாளர் – எம்.நயீமுள்ளாஹ்
பிரதிச் செயலாளர்  – நிசாம் காரியப்பர்
பிரதிப் பொருளாளர் – கே.எம்.ஏ.ஜவாத்
மஜ்லிஸுல் ஸுரா பிரதித் தலைவர் – எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி
பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளர் – ஏ.ஆர். ரஹ்மத் மன்சூர்
பிரதி தேசிய அமைப்பாளர் – பைசால் காசீம்
செயற்குழு செயலாளர் – சியாட் அஹமட்
பேராளர் மாநாட்டுச் செயலாளர் – ஐ.எல்.எம்.மாஹீர்
மஜ்லிஸுல் ஸுரா செயலாளர் – யூ.எம்.வாஹிட்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீட உறுப்பினர்களான எம்.நயீமுள்ளாஹ் மற்றும் ரஹ்மத் மன்சூர் ஆகியயோருக்கு கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரான எம்.நயீமுள்ளாஹ் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளராகவும் மற்றும் முன்னாள் அமைச்சர் மன்சூரின் புதல்வாரன ரஹ்மத் மன்சூர் அமைச்சரின் இணைப்புச் செயலாளராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.