224 பேருடன் எகிப்தின் சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானத்தை தீவிரவாதிகள் வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்திருக்கலாம் என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் ஆகிய இருவரும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு ரேடியோவிற்கு அளித்துள்ள பேட்டியில் “ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் தீவிரவாதிகள் வெடிக்க செய்து வீழ்த்தி இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்” என தெரிவித்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் செய்தியாளர்களிடம் பேசும்போது “வெடிகுண்டு மூலம் விமானம் தகர்க்கப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் தொலைத்தொடர்பு பேச்சுகளை அமெரிக்க மற்றும் இங்கிலாந்து உளவுதுறைகள் இடைமறித்து கேட்டதன் அடிப்படையில் ஒபாமா மற்றும் கேமரூன் ஆகிய இருவரும் மேற்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.