இந்தியாவில் சீன முதலீடு அதிகரித்துள்ளதை வரவேற்கிறேன் : பிரதமர் மோடி !

0.69795600_1446816741_vice-president-of-china-mr-li-yuanchao-met-pm-modi-3

 சீன துணை அதிபர் லீ யுவான்சாவ் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகை, கொல்கத்தாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் இல்லம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, சீன துணை அதிபர் லி யுவான்சோ நேற்று சந்தித்து பேசினார். அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை புரிந்ததையும், தான் சீனாவிற்கு சென்ற அனுபத்தையும் லி யுவான்சோவிடம் மோடி பகிர்ந்து கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவில் சீன நாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும் இந்தியாவிற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். 

இந்தியா மற்றும் சீனா இடையில் அமைதி, கூட்டுறவு, நிலைத்தன்மை ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றார்.

0.79401700_1446816731_vice-president-of-china-mr-li-yuanchao-met-pm-modi-5