வருடாந்தம் 2.5 மில்லியன் பேர் ஆசிய நாடுகளில் இருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்கின்றனர் !

83174_thalatha-ahtukorala-01

 வருடாந்தம் 2.5 மில்லியன் பேர் ஆசிய நாடுகளில் இருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்கின்றனர். இவர்கள் தத்தம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெருமளவில் பங்களிப்பும் நல்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரி வித்தார்.

“கொழும்பு செயற்பாடு” தொடர்பான மூன்றாவது மாநாட்டின் ஆரம்ப அமர்வில் அவர் உரையாற்றினார். கொழும்பு ஒஸோ ஹோட்டலில் இம்மாநாடு ஆரம்பமானது.

உலகில் வெளிநாட்டுத் தொழிலுக்கு ஆட்களை அனுப்பும் 10 நாடுகளுள் ஆறு நாடுகள் “கொழும்பு செயற்பாட்டி”ன் அங்கத்துவ நாடுகளாகவுள்ளன.

இலங்கை, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிரிப்பைன்ஸ் ஆகியவை அந்த நாடுகளாகும். வெளிநாட்டு வேலைவாப்புகள் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவினாலும் பெண்களை தொழிலுக்கு அனுப்பும் விடயத்தில் அதிக அவதானத்தை அங்கத்துவ நாடுகள் செலுத்த வேண்டும்.

இம்முறை இவ் விடயமாக கொழும்பு செயற்பாடு மாநாட்டில் நாம் கவனம் செலுத்துவோம். கொழும்பு செயற்பாட்டு நாடுகளிலிருந்து வெளிநாட்டுத் தொழில்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை 42 வீதமாக அதிகரித்து உள்ளது.

வெளிநாடுகளில் தொழிலில் ஈடுபட் டுள்ளவர்களுக்கு சிறந்த விடயங்கள் கிடைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் உழைக்கும் பணத்தை பாதுகாப்பாகவும் விசுவாசமாகவும் தத்தம் நாடுகளில் உறவினர்களுக்கு அனுப்புவதற்காக சிறந்த பொறிமுறை அவசியமாகும்.

இவ்விடயம் தொடர்பாகவும் அவதானம் செலுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐ.நா.வின் ஜெனீவா நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, அமைச்சின் செயலாளர் பீ.எஸ். விதானகே ஆகியோரும் இம்மாநாட்டில் உரை யாற்றினார்