ஆப்கான் தலிபான் அமைப்பில் இருந்து பிரிந்த குழுவொன்று மாற்று தலை வர் ஒருவரை அறிவித்துள்ளது. தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மரணத்து க்கு பின்னர் அந்த அமைப்புக்குள் பிளவு தீவிரமடைந்துள்ளது.
ஆப்கானின் பராஹ் மாகாணத்தில் தலிபான் அமைப்பில் இருந்து பிரிந்த குழுவொன்றின் கூட்டத்தில் முல்லாஹ் முஹமது ரஸல் என்பவர் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். தலிபான்களின் புதிய தலைவரான முல்லாஹ் அக் தார் மன்சூர் அந்த அமைப்பை தனிப்பட்ட பேராசைக்காக ஆக்கிரமித்திருப்பதாக எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முல்லா ஒமர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டதை தலிபான் அமைப்பு உறுதி செய்ததை அடுத்தே கடந்த ஓகஸ்டில் மன்சூர் புதிய தலைவ ராக நியமிக்கப்பட்டார். இதில் மாற்று தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முல் லாஹ் ரஸ_ல் பராஹ்வில் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் மூக்குக்கண்ணாடி அணிந்திருக்கும் அவர் கறுப்பு தலை ப்பாகை அணிந்து ஆயுதங்களுடன் இருக்கும் ஆதரவாளர்களிடம் உரையாற்று கிறார். முல்லாஹ் ரஸ_ல் தலிபான் அரசில் நிம்ரோஸ் மாகாணத்தின் ஆளுன ராக இருந்தவராவார். எனினும் அவர் ஒரு மார்க்க அறிஞர் இல்லை என குறி ப்பிடப்பட்டுள்ளது.