இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 22 பலஸ் தீனர்களின் சடலங்களை இஸ்ரேல் நிர்வாகம் தொடர் ந்து தடுத்து வைத்துள்ளது. கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் அண்மைய பதற்றங்களால் கொல்லப் பட்ட பலஸ்தீனர்களின் சடலங்களே குடும்பத்தினரிடம் கையளிப்பது மறுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் மொத்தம் 33 பலஸ்தீன ர்களின் சடலங்களை விடுவிக்க இஸ்ரேல் மறுத்த நிலை யில் அண்மைய தினங்களில் 11 சடலங்கள் விடுவிக்கப் பட்டிருப்பதாக தியாகிகளின் உடல்களை மீட்டெடுப்பதற் கான பலஸ்தீன தேசிய குழு குறிப்பிட்டுள்ளது.
மேற்குக் கரை மற்றும் கிழக்கு nஜரூசலத்தில் தொட ரும் பதற்றத்தை தணிக்கவே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக இஸ்ரேல் நிர்வாகம் குறிப்பிட்டுள் ளது. குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும் சடலங்களுக் கான இறுதிக் கிரியைகளில் பாரிய மக்கள் கூட்டம் பங் கேற்கக் கூடாது என இஸ்ரேல் நிபந்தனை விதித்து வரு கிறது.
எனினும் கடந்த வாரம் ஹெப்ரூன் நகரில் இடம்பெற்ற ஐந்து பலஸ்தீனர்களின் இறுதிக் கிரியையில் ஆயிரக்கண க்கானவர்கள் பங்கேற்றிருந்தனர். கொல்லப்பட்ட இந்த ஐவரும் 18 வயதுக்கு குறைந்தவர்களாவர்.
இவ்வாறான பாரிய இறுதிக் கிரியை நிகழ்வுகள் மேற்கொ ள்ளப்பட்டார் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலஸ்தீனர்க ளின் சடலங்கள் இஸ்ரேலுக்குள்ளேயே அடக்கம் செய்யப் படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் ‘மரணித்த எதிரிகள்’ என்று அடையாளம் இட ப்பட்ட பலஸ்தீனர்களை அடக்கம் செய்ய அடக்கஸ்தலம் ஒன்றை பேணி வருகிறது. இவ்வாறு சுமார் 262 பலஸ்தீன ர்களின் சடலங்களை இஸ்ரேல் தடுத்துவைத்திருப்பதாக நம் பப்படுகிறது. இந்த சடலங்களை மீட்க பலஸ்தீன குடும்ப ங்கள் கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேல் உயர் நிதிமன் றத்தில் மேன்முறையீடு செய்து வருகின்றமை குறிப்பிடத்த க்கது.