எகிப்தில் விழுந்து நொறுங்கி 224 பேரை பலி கொண்ட ரஷ்ய விமானத்தை குண்டொன்றே வீழ் த்தியிருக்க வேண்டும் என்று புலனாய்வு வட்டாரம் அறிவுறுத்துவதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இது தொட ர்பில் ஒரு முறையான முடிவுக்கு வரவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக குறித்த விமானம் புறப்பட்ட ‘hம் அல் n’ய்க் நகருக்கான விமானப் போக்குவரத்தை பிரிட்;டன் இடைநிறுத்தியது.
இந்த விமானத்தை வீழ்த்தியதாக இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுடன் தொடர்புபட்ட ஆயுத தாரிகள் பொறுப்பேற்றபோதும் அதனை எகிப்து அரசு நிராகரித்துள்ளது. இதுபற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என்று ரஷ்ய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை விமான அறையின் குரல் பதிவு கொண்ட கறுப்புப் பெட்டி விபத்தினால் மோசமாக சேதமடைந்திருப்பதாக எகிப்து அதிகா ரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் விமானத் தரவுகள் கொண்ட கறுப்புப் பெட்டியில் இருந்து தகவல்களை பெற முடிந்ததாகவும் அவை ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டு வருவதாகவும் எகிப்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முஹமது ஹ{ஸைன் கமால் குறிப்பிட்டுள்ளார்.
‘hம் அல் n’ய்க்கில் இருந்து கடந்த சனிக்கி ழமை ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை நோக்கி புறப்பட்ட ஏர்பஸ் 321 விமானம் 23 நிமிட ங்கள் கழித்து சினாய் பாலைவனத்தில் விழுந்து நொறு ங்கியது. ரஷ்யாவின் கொகலிமாவியா விமானசே வைக்கு சொந்தமான இந்த விமானத்தில் பயணி த்தவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்ய நாட்டவ ர்களாவர்.
“விமானத்திற்குள் இருந்த வெடிக்கும் பொருள் ஒன்றே விபத்துக்கு காரணம் என்ற கணிசமான சாத் தியத்திற்கு எம்மால் வர முடியுமாக உள்ளது” என்று பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் பிலிப் ஹெம்மன்ட் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் அரசின் அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திற்கு பின்னரே இதனை தெரிவித்துள்ளார்.
‘hம் அல் n’ய்க்கிற்கான விமான போக்குவர த்துகளை பிரிட்டன் இடைநிறுத்திக் கொள்வதாக குறிப்பிட்ட அவர் ஏற்கனவே அங்கு இருக்கும் பிரி ட்டன் நாட்டவர்களை வெளியேற உதவுவதாகவும் தெரிவித்தார். எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருக் கும் நிலையிலேயே அந்நாட்டு அரசு இந்த அறி விப்பை விடுத்துள்ளது.
எனினும் பிரிட்டனின் இந்த அறிவிப்பு முதிர்ச்சிய ற்றது என்றும் பொறுப்பற்றது என்றும் எகிப்து வெளி யுறவு அமைச்சர் சமாஹ் ‘{க்ரி சாடியுள்ளார்;. ‘hம் அல் n’ய்க் விமானநிலையத்தில் எகிப்து கடும் பாது காப்பை பேணிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம் சினாயில் இயங்கும் ஐ.எஸ்ஸ{டன் தொட ர்புடைய ஆயுதக் குழுவின் தொலைத்தொடர்பை இடைமறித்து பெற்ற தகவலின் அடிப்படையில் விமா னத்திற்குள் வெடிபொருள் வைக்கப்பட்டதற்கான முடி வுக்கு வர முடிவதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.பீ. செய்திச் சேவைக்கு குறிப் பிட்டுள்ளார். “இந்த அனர்த்தத்திற்கு குண்டொன்றே காரணமாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது” என்று மற்றொரு அமெரிக்க அதிகாரி ஏ.எப்.பீ. செய் திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போ தைய நிலையில் இது வெறும் ஊகமாகவே இருக்க முடியும் என்று ரஷ்யா மறுத்துள்ளது.