காத்தான்குடி பிரதேசத்தில் கால்நடைகளுக்கான இலவச நடமாடும் வைத்திய முகாம் !

பழுலுல்லாஹ் பர்ஹான்
1-DSC_0015_Fotor
 
காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடைகளுக்கான இலவச நடமாடும் வைத்திய முகாம் இன்று 5 வியாழக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் குபா ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
 
மேற்படி கால்நடை வைத்திய நடமாடும் சேவையில் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.டுஜித்திரா லிங்கேஸ்வரன் , கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தரகள்,
கால்நடை அபிவிருத்தி காரியாலய உத்தியோகத்தரகள், கால்நடை பண்ணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 DSC_0030_Fotor
இதன் போது கால்நடைகளுக்கு அம்மை நோய் வராமல் பாதுகாப்பதற்கான தடுப்பு ஊசிகாத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.டுஜித்திரா லிங்கேஸ்வரனினால் கால்நடைகளுக்கு போடப்பட்டது.
 
இங்கு ஆடு,மாடு,கோழி உட்பட கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலவச வைத்திய ஆலோசனயும்,இலவச மருந்து விநியோகமும்,புதிய பண்ணையாளர் பதிவும், கால்நடைகளை பார்வையிட்டு மருந்து வகைகளை வழங்கல் என பல்வேறு சேவைகள் இடம்பெற்றன.
 
குறித்த நடமாடும் சேவையினூடாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடை பண்ணையாளர்கள் பலர் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3-DSC_0025_Fotor